‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரமணி’, ‘நையப்புடை’, ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’ உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ள டான்பாஸ்கோ, இயக்குநராக களம் இறங்கியுள்ளார்.
அவர் இயக்கும் முதல் படத்திற்கு ‘7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை சேலம் ராஜ்குமார் தயாரிக்கிறார். மணி ராஜு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இ.ஜே.ஜான்சன் இசையமைக்க, ரம்யா இமாகுலேட் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஜான் பிரிட்டோ கலை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் ’7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஆர்.பிரபாகரன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ளனர்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...