Latest News :

சினிமாவை மையமாக வைத்து உருவாகும் ‘முடிவில்லா புன்னகை’
Wednesday August-29 2018

குட்சன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆரோக்கியசாமி க்ளமெண்ட் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘முடிவில்லா புன்னைகை’. அறிமுக நாயகன் டிட்டோ நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ரக்‌ஷிதா நடித்திருக்கிறார். இவர் ‘கோலி சோடா 2’ நடித்து இருக்கிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். கூல் சுரேஷ் நகைச்சுவை வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நெல்லை சிவா, டெலிபோன் ராஜ் ஆகியோர் நடிக்க, இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆரோக்கியசாமி க்ளமெண்ட் முக்கியமான மிகப்பெரிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் காதலையும், குடும்பத்தையும் தொலைத்த பலர் இறுதியில் வாழ்க்கையையும் எப்படி தொலைத்து விடுகிறார்கள், என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த காதல் கதையின் பின்னணியில் சொல்லியிருக்கிறார். அதுமட்டும் இன்றி சமூகவலைதலங்கள் எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் இப்படத்தில் பேசியிருக்கும் இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமெண்ட், தற்போதைய காலக்கட்ட இளைஞர்களுக்கு பிடித்த வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

 

காதல், பிரிவு, சஸ்பென்ஸ், திரில்லர் ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் உள்ளடக்கிய கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தஷி பின்னணி இசை அமைத்திருக்க, இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமெண்ட் பாடல்களுக்கு இசையமைத்திருப்பதோடு, இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார். இளையகம்பன் நான்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆர்.எஸ்.பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜேகப் சாமுவேல் ஆரோக்கியசாமி க்ளமெண்டுடன் இணைந்து இசை பணியை மேற்கொண்டிருக்கிறார். பகத்சிங் எடிட்டிங் உதவியாளராக பணியாற்ற, ராம் முருகேஷ், பவர் சிவா ஆகியோர் நடனம் அமைத்திருக்கிறார்கள். லட்சுமி, டீனா ஆகியோர் இணை தயாரிப்பு பணியை கவனித்துள்ளனர்.

 

ஊட்டி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படம் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்குவதற்கு முன்பாகவே கூவத்தூரில் படமாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னையில் பல லைவ் லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியிட்டு தயாராக இருக்கும் இப்படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் விரைவில் திரையிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து விரைவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Related News

3340

‘ரெட்ட தல’ எனக்கு சவாலாக இருந்தது - நடிகர் அருண் விஜய்
Tuesday December-16 2025

பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில்,  ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது பெருமையான விசயம் - நடிகர் சுதீப் நெகிழ்ச்சி
Tuesday December-16 2025

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘மார்க்’...

‘கொம்பு சீவி’ பட இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் வைத்த கோரிக்கை!
Tuesday December-16 2025

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

Recent Gallery