தொடர் வெற்றிப் படங்களை தயாரித்து வரும் சி.வி.குமார், தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிக்கும் புதுப்படத்திற்கு ‘ஜாங்கோ’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.
இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகவும், ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய மனோ கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தில், சதிஷ் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மிர்னாலினி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், ஆர்.ஜே.ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளசி, சந்தானபாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். ராதாகிருஷ்னன் தனபால் படத்தொகுப்பு செய்ய, கோபி ஆனந்த் கலையை நிர்மாணிக்கிறார். மீனாக்ஷி ஷ்ரிதரன் காஸ்ட்யும் டிசைனராக பணியாற்ற, ஹரி தினேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பாளராக நிகில் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான சதிஷ்குமார் போன்ஸ்லே கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...