தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்கள் மகிழ்ச்சியடைவதோடு, திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கூட பெரும் உற்சாகமடைந்து விடுகிறார்கள்.
தற்போது இருக்கும் ஹீரோக்களில் சிறந்த ஓபனிங் உள்ள ஹீரோக்களின் வரிசையில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்திருப்பதால், அவரது படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களும் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டும் வருகிறது.
இப்படி உள்ளூரில் உயந்த சிவகார்த்திகேயன், தற்போது வெளிநாடுகளிலும் தனது வசூல் வேட்டையை தொடங்க பிள்ளையார் சுழி போட்டுவிட்டார். ஆம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மூன்றாவது படமான ‘சீமராஜா’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டிலும் மிகப்பெரிய அளவில் படம் வெளியாகப் போகிறது.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா ஆகியோரது படங்கள் மட்டும் ஐரோப்பிய நாடான போலந்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படமும் அந்நாட்டில் வெளியாக உள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளிலும் தனது மாஸை சிவகார்த்திகேயன் காட்டப் போகிறார்.

ஆயுதபூஜையை முன்னிட்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ‘சீமராஜா’ உலகம் முழுவதும் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...