Latest News :

சிவகார்த்திகேயன் மகள் பாடியா பாட்டு! - மகிழ்ச்சியின் உச்சத்தில் பாடலாசிரியர் ஜி.கே.பி!
Thursday August-30 2018

நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா ‘கனா’ படத்திற்காக பாடிய “வாயாடி பெத்த புள்ள” பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், அப்பாடலை எழுதிய பாடலாசிரியர் ஜி.கே.பி செம ஹாப்பியில் இருக்கிறார்.

 

சூதுகவ்வும் படத்தில் இடம் பெற்ற "கம் னா கம்" பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

 

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஜி.கே.பி எழுதிய "வாயாடி பெத்த புள்ள" பாடல் வெளியானது. 

 

இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைகோம் விஜயலஷ்மி பாடியுள்ளனர்.

 

"வாயாடி பெத்த புள்ள" பாடல் வெளியான கனம் முதல் இப்பாடலின் வரிகளும் இசையும் அனைவரையும் கவர்ந்தது. சமுக வளைத்தலங்களில் பிரபலம் ஆனது.

 

தான் எழுதிய பாடலை அனைவரும் கொண்டாடுவதை அறிந்த ஜி.கே.பி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.

 

இது குறித்து கூறிய ஜி.கே.பி, ”இப்படிபட்ட பாராட்டுகள் ஒரு கலைஞனை மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை படைக்க தூண்டும், எனவே இந்த பாராட்டுகள் என்னை நான் அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்ல தூண்டும் தூண்டுகோள்.” என்றார்.

Related News

3351

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery