யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சுய் தாகா - மேட் இன் இந்தியா’ திரைப்படம் எதிர்ப்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாகும். வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, எளிமையான திருமணமான பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது கணவராக வருண் தவான் நடித்திருக்கிறார்.
தேசிய விருது இயக்குநர் சரத் கட்டாரியா இயக்கியிருக்கும் இப்படத்தை மணீஷ் சர்மா தயாரித்திருக்கிறார்.
எளிமையான பெண் ஒருவர் தனது சொந்த தொழில் மூலமாக முன்னேறுகிறார், என்ற கருத்தினை சொல்லும், இப்படத்தில் மம்த என்ற கதாபாத்திரத்தில் எளிமையான பெண் வேடத்திருக்கும் அனுஷ்கா ஷர்மா, படம் முழுவதும் எளிமையான உடைகளில், மேக்கப் இல்லாமலே நடித்திருக்கிறாராம்.
இது குறித்து கூறிய ஆடை வடிவமைப்பு இயக்குநர் தர்சன், “பன்முக திறமையுள்ள நடிகை அனுஷ்கா ஷர்மா அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த ‘சுய் தாகா’ படத்திற்காக மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார். படத்தில் ஒரு அமைதியான மற்றும் எளிமையான கைத்தறி தொழில் செய்யும் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார்.” என்றார்.
அனுஷ்கா ஷர்மா தனது வேடம் குறித்து கூறுகையில், “படத்தின் டிரைலரை பார்த்ததும், என் கதாபாத்திரத்தின் தோற்றம் மிகவும் அருமையாக இருந்தது. இதற்கு எல்லாம் காரணம் ஆடை வடிவமைப்பாளர் தர்சன் மற்றும் மேக்கப் கலைஞர்கள் தான். மேக்கல் இப்பாலம் படபிடிப்புக்கு தயாராக எனக்கு 20 நிமிடங்கள் தேவைப்பட்டது.” என்றார்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...