மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே, தமிழ் சினிமாவின் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத ஓபனிங்கோடு நேற்று வெளியான ‘விவேகம்’ வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே காட்சியோடு வாஷ் அவுட் ஆகியிருப்பது திரையரங்க உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் கவலையடைய செய்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் சுமார் 600 திரையரங்குகளில் வெளியான ‘விவேகம்’ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் அமோகமாக நடைபெற்ற போல, நேற்றியை ஓபனிங்கும் திரையுலகமே பிரமிக்கும் வகையில் இருந்தது. ஆனால், இவை அனைத்து காலை 8 மணி காட்சியோடு சரி, அதற்கு பிறகு திரையிடப்பட்ட காட்சிகள் அனைத்தும் டல்லடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் அட்வான்ஸ் புக்கிங் மூலம் 3 நாட்களுக்கு டிக்கெட்கள் விற்றுவிட்டதால் அவர்கள் தப்பித்துள்ள நிலையில், பிற ஏரியாக்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் பெரும் கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வந்த அஜித்தின் ரசிகர்களே, “இன்னுமா நம்ம தல சிவாவை நம்புறாரு”, “சொதப்பிடாரே சிவா” என்றெல்லாம் கமெட்ன் அடித்தது தான் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும் சில ரசிகர்கள் ட்விட்டரில் படத்தை அப்படி இப்படி...என்று புகழ்ந்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, அதை நம்பி படம் பார்த்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்ததும் தோல்விக்கு ஒரு காரணம். அதைவிட முக்கிய காரணம், அஜித் படம் தானே, எதற்கு புரோமோஷன், என்ற எண்ணத்தில் விளம்பரத்தில் கவனம் செலுத்தாமல் தயாரிப்பு தரப்பு மெத்தனமாக இருந்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.
மொத்தத்தி, வரும் திங்கட்கிழமையன்று படத்தின் முழு விவரங்கள் தெரிந்துவிடும், என்று கோடம்பாக்க வியாபாரிகள் கூறியுள்ளனர்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...