திமுக-வில் இருந்த குஷ்பு சில கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் இருந்தாலும் அவ்வபோது திமுக குறித்து கருத்துக்களை குஷ்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், கருணாநிதிக்கும், தனக்கும் இடையே இருந்த உறவை சில கொச்சைப்படுத்தியதாக குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் புகழ் வணக்கம் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய குஷ்பு, தமிழ்நாட்டு மக்களுக்காக இறுதி வரை போராடிய கலைஞர் கருணாநிதியிடம் இருந்து, தாம் தமிழையும், அரசியலையும் கற்றுக்கொண்டடேன் என்றார்.
தமக்கு தமிழ்மொழி மீதான பற்று வருவதற்கு காரணமே கருணாநிதி என்றும், மரியாதை என்பதற்கான அர்த்தத்தையும் கருணாநிதியிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தனக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்ட கொள்கைகளை கற்றுக் கொடுத்ததும் கருணாநிதிதான் என்றார்.
மேலும், தமக்கும் கருணாநிதிக்கும் இடையிலான உறவு தந்தை மகள் போன்றது என்று குறிப்பிட்ட குஷ்பு, ஆனால், அந்த உறவு கொச்சைப்படுத்தப்பட்டதாக கூறி, தனது வேதனையை தெரிவித்தார்.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...