Latest News :

வில்லன் அவதாரம் எடுக்கும் ஜித்தன் ரமேஷ்!
Wednesday September-05 2018

‘ஜித்தன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ரமேஷ், அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘ஜித்தன்’ ரமேஷாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் தயாரிப்பு துறையில் கவனம் செலுத்தி வந்தவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

ஆனால், இந்த முறை ஹீரோவாக அல்லாமல் அதிரடியான வில்லன் வேடத்தில் ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார். 

 

ஜித்தன் ரமேஷ் வில்லனாக நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயரிப்படவில்லை. இப்படத்தில் நாயகனாக சாய் என்பவ நடிக்கிறார். இதில் ஹீரோயினாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற அறிமுக நடிகை நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தி பார்க் ஓட்டலில் பாடல் காட்சியுடன் தொடங்கியது. இதில் ஜித்தன் ரமேஷுடன் ஏராளமான அழகிகள் ஆடிப் பாடுவது போன்ற பாடல் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

 

ரவி ஓளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆனந்த் இசையமைக்க, ஹரி எடிட்டிங் செய்கிறார். பிரேம் ரக்‌ஷின் நடனம் அமைக்க, டிராகன் பிரகாஷ் சண்டைப்பயிற்சி அமைக்கிறார். ஆர்.ரமேஷ், ராம் பிரபு ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, ரவி செளத்ரி, நாகர்ஜுனா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். வம்சி கிருஷ்ணா மல்லா இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார்.

 

திடீரென்று வில்லன் அவதாரம் எடுத்த ரமேஷிடம் காரணம் கேட்டதற்கு, “படம் திரைக்கு வந்தவுடன் இந்த கேள்வி வராது. சில மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். இயக்குநர் கேரக்டரை சொன்னவுடன் இந்த கேரக்டரை விடக் கூடாது என்று முடிவெடுத்து ஓ.கே சொன்னேன்.

 

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் ஹீரோவா வில்லனா? அது மாதிரி தான் என் கேரக்டரை சொல்லனும்னா "ஹை வோல்டேஜ் வில்லன்" என்று சொல்லலாம்.” என்றார்.

 

தற்போது சென்னையில் தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தக்கட்டமாக கோவாவில் நடைபெற உள்ளது.

Related News

3380

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery