Latest News :

புதுமுகங்கள் நடிக்கும் ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’
Wednesday September-05 2018

அருணாச்சலம்  தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஏ.சரவணன் தயாரிக்கும் படத்திற்கு ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

 

இந்த படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரிஷா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் நளினி நாடோடிகள் கோபால், கோதண்டம் பரோட்டா முருகேஷ் ஈரோடு முருகசேகர், திடியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவு  - பாலா, இசை மற்றும்  பாடல்கள் - செளந்தர்யன், கலை - தேவராஜ், எடிட்டிங் - கோபிகிருஷ்ணா, தயாரிப்பு மேற்பார்வை - சாட்டை N.சண்முகசுந்தரம், ஜெ.பாரதிராஜா, தயாரிப்பு - அருணாசலம் தியேட்டர்ஸ் ஏ.சரவணன்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் சு.சத்தியசீலன் படம் குறித்து கூறுகையில், “இது முழுக்க முழுக்க  பேமிலி காமெடி சப்ஜெக்ட். இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைப்பது தான் எங்களது நோக்கம்.

 

தயாரிப்பாளர் சரவணன் அவர்கள் திருவண்ணாமலையில் அருணாசலம் தியேட்டரை பல வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார். தியேட்டரில் மக்கள் என்ன மாதிரியான படங்களை ரசிக்கிறார்கள் ..என்ன மாதிரியான காட்சிகளை கை தட்டி ரசிக்கிறார்கள். என்ன மாதிரியான படத்திற்கு மக்கள்  கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்பது அத்துப்படி. அப்படிப்பட்ட சரவணன் தேர்ந்தெடுத்த கதை தான் இந்த ’லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ கதை.  அந்த குடும்பத்தை பார்ப்பதே தப்பு என்று இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிற பகை.

 

அப்படிப்பட்ட இரண்டு  குடும்பத்தை சேர்ந்த பையனும் பெண்ணும் காதலித்தால் என்ன ஆகும். முந்தைய தலைமுறை மோதிக் கொள்ள, அடுத்த தலைமுறை காதல் கொள்வது என்பது எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்பது தான் திரைக்கதை.” என்றார்.

 

பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஈரோடு மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் நடைபெற்றுள்ளது.

Related News

3381

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery