’காலா’ வை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் 165 வது படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாததால் ‘தலைவா 165’ என்று அழைக்கின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது.
இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சிம்ரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக, தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று மாலை படத்தின் தலைப்புடன், மோசன் போஸ்டர் மற்றும் பஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...