கன்னட சினிமாவை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் திரும்பி பார்க்க வைத்தப் படம் ’லூசியா’. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கத்தில் வெளியான கன்னடப் படமான ‘யுடர்ன்’ லூசியாவை போல மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, மீண்டும் இந்திய சினிமாவின் பார்வையை கன்னட சினிமா பக்கம் திருப்பியுள்ளது.
தற்போது தமிழில் ‘யுடர்ன்’ என்ற தலைப்பிலேயே ரீமேக் ஆகியிருக்கும் இந்த படத்தை ஒரிஜினல் ‘யுடர்ன்’ படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கிறார். சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் ஆதி, பூமிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ள ‘யுடர்ன்’ படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உருவாகியிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், 128 நிமிடங்கள் ஓடும் இப்படம் முழுவதும் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும்படி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தை வெகுவாக பாராட்டியதோடு யு/ஏ சான்றிதழும் வழங்கியுள்ளார்கள்.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...