ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் படம் ‘2.0’ என்பதும், பல முறை ரிலீஸ் தள்ளிப்போன இப்படம் வரும் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது என்பதும், அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அறியாதது இப்படத்தின் டீசர், டிரைலர் எப்போது வெளியாகும் என்பது தான். தற்போதும் அதுவும் தெரிந்துவிட்டது. ஆம், ‘2.0’ படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. சாதாரணமாக அல்ல 3டி யில் வெளியாக உள்ளது. ஒரு படத்தின் டீசர் 3டி யில் வெளியாவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க, ஹீரோயினாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்கான் இசையில், லைகா நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறது.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...