‘தெறி’, ‘மெர்சல்’ என விஜய்க்கு இரண்டு பெரிய ஹிட் கொடுத்த அட்லீ தான் விஜயின் 63 வது படத்தையும் இயக்கப் போகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டாலும், இப்படம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவாரை வெளியாகவில்லை. அதே சமயம், அட்லீ - விஜய் கூட்டனி உறுதி என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் அட்லீ, விஜய் படத்தின் கதை விவாதத்திற்காக மலைப்பிரதேசம் ஒன்றில் தனது உதவியாளர்களுடன் முகாமிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தெறி-யில் விஜயை போலீஸாக காட்டியவர், மெர்சலில், கிராமத்து பின்னணி, மேஜிஸியன், டாக்டர் என்று மூன்று வேடங்களில் காட்டினார். தற்போது விஜயை வைத்து ஸ்பை திரில்லர் படத்தை இயக்க அட்லீ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...