சினிமா நடிகைகள் போல, டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகளும் மக்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள். சில நேரங்களில் சினிமா ஹீரோயின்களையும் தாண்டி இவர்கள் பெண்களிடம் பிரபலமாகிவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பிரபலமான சீரியல் நடிகை தான் சந்தியா. ’அத்திப்பூக்கள்’, ‘வம்சம்’ போன்ற சீரியல்களில் நாயகிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்த இவர், வம்சம் சீரியல் மூலம் பூமிகாவாக தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார்.
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் சந்தியா ஒரு சில தமிழ்ப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், தன்னை நிரூபிக்கும்படியான வேடம் கிடைக்கவில்லையே, என்ற வருத்தம் இருக்கிறதாம்.
இதற்கிடையில், தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்திருக்கிறாராம். இந்த விஷயம் அறிந்த கோலிவுட் இயக்குநர்கள் சிலர் சந்தியாவை அம்மா வேடத்திற்காக கேட்கிறார்களாம். அதுவும், ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்க சொல்கிறார்களாம்.
ஒரு அக்கா, அண்ணி என்றால் கூட பரவாயில்லை, இப்படி அம்மா வேடத்திற்கு, அதுவும் ஹீரோ, ஹீரோயின்களின் அம்மாவாக நடிக்க கூப்பிடுகிறார்களே, என்று சந்தியா ரொம்பவே அப்செட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...