Latest News :

மாதவரத்தில் அதிநவீன ஜிம்! - விஜய் பட வில்லன் திறந்து வைத்தார்
Friday September-07 2018

மனிதர்களுக்கு உடல் நலம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதனை சரியான முறையில் பராமரிக்க சரியான உடற்பயிற்சி அவசியம். அதனை சிறந்த முறையில் வழங்கிடவே இன்று பல நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் (GYM) உருவாகி வருகின்றன.

 

அந்த வகையில், சென்னை மக்களிடம் பிரபலமாக விளங்கும் அதிநவீன உடற்பயிற்சிக் கூடமாக திகழ்கிறது ‘கேர்வீ பிட்னஸ்’. (CAREVE FITNESS) 

 

அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகைஇயில் ஓர் நவீன உடற்பயிற்சிக் கூடத்தை உருவாக்கிட வேண்டும், என்று சி.வி.கோகுல்நாத் கண்ட கனவால், கடந்த 2016 ஆம் ஆண்டு உதயமானது தான் ‘கேர்வீ பிட்னஸ்’. (CAREVE FITNESS) 

 

Carve Fitness

 

தற்போது சென்னையில் சிறந்த தொழில் முனைவராக உள்ள சி.வி.கோகுல்நாத்தின் இந்த ‘கேர்வீ பிட்னஸ்’ (CAREVE FITNESS) சென்னையில் பல கிளைகளை திறந்து வருகிறது. அந்த வரிசையில், சென்னை மாதாவரத்தில் ‘கேர்வீ பிட்னஸ்’ (CAREVE FITNESS) தனது புதிய கிளையை திறந்துள்ளது.

 

செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற இந்த புதிய ‘கேர்வீ பிட்னஸ்’. (CAREVE FITNESS) திறப்பு விழாவில், ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் தனிப்பட்ட உடற்பயிற்சி பயிற்சியாளராகவும், விஜயின் ‘மெர்சல்’, விஷாலின் ‘பூஜை’, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘அடங்கமறு’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து, கோலிவுட்டின் வளர்ந்து வரும் வில்லன் நடிகராகவும் உள்ள பரத்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாதவரம் CAREVE FITNESS கிளையை திறந்து வைத்தார்.

 

Carve Fitness

 

BOOT CAMP, CROSS FIT உள்ளிட்ட அனைத்து சிறப்பு அம்சங்களும் கொண்ட ‘கேர்வீ பிட்னஸ்’ (CAREVE FITNESS) ஜிம் மாதாவரத்தில் திறக்கப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களுக்கு ஓர் நற்செய்தி தான்.

Related News

3397

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery