கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ரச்சனா, நடிகர் ஜீவன், நேற்று கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்கள்.
100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ள ஜீவன், கன்னட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். நடிகை ரச்சனா, கன்னட தொலைக்காட்சி உலகில் மிகவும் பிரபலமானவர்.
ரச்சனா, ஜீவன் உள்ளிட்ட நண்பர்கள் படப்பிடிப்பிற்காக நேற்று மாலை சென்ற போது கார் விபத்துக்குள்ளானது. இதில் ஜீவன், ரச்சனா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். மற்ற 5 நடிகர்கள் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரை ஓட்டிய ஜீவன், தூக்க கலக்கத்தில் சாலை ஓரம் நின்றுக்கொண்டிருந்த டேங்கர் லாரி மீது காரை மோதியிருக்கலாம், என்று கூறப்படுகிறது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...