Latest News :

தினேஷுக்கு மாமியாரான தேவயானி!
Saturday September-08 2018

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தை தயாரிக்கிறார்.

 

தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.  

 

ஒளிப்பதிவு - சரவண்ணன் அபிமன்யு, இசை  - என்.ஆர்.ரகுநந்தன், பாடல்கள் - மோகன்ராஜன், ஏக்நாத், கலை  - மாயா பாண்டி, எடிட்டிங் - பொன் கதிரேசன், நடனம் - தினேஷ், ஸ்டன்ட் - திலீப்சுப்பராயன், தயாரிப்பு  மேற்பார்வை - சிவசந்திரன், நிர்வாக தயாரிப்பு - ஸ்டில்ஸ் ராபர்ட், இணை தயாரிப்பு - திருமூர்த்தி, தயாரிப்பு  - ராஜேஸ்வரி மணிவாசகம்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் காந்தி மணிவாசகம் படம் குறித்து கூறுகையில், “என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப்பார். மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல், நிறைய காமெடி வைத்திருப்பார். அதன்படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது. அதைத் தான் நானும் தொட்டிருக்கிறேன். பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். வழக்கமாக மாமியார் மருமகள் கதைகள் தான் சினிமாவில் வந்திருக்கிறது. ஜெயித்திருக்கிறது. மாமியார் மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும். அமோக வெற்றி பெறும். அப்படித் தான் இது உருவாக்கப் பட்டிருக்கிறது.

 

தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்ட போது தயங்கினார். முழு கதையையும் கேட்ட உடன் ஓ.கே.சொன்னார். அந்தளவுக்கு மாமியார் மருமகன் பிரச்சனையை  இதில் கையாண்டிருக்கிறோம். ஜாலியான பொழுது போக்கு படமாக களவாணி மாப்பிள்ளை உருவாகி இருக்கிறது. படம் இம்மாதம் வெளியாகிறது.” என்றார்.

Related News

3402

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery