Latest News :

சொகுசு கார் மோசடியில் பிரபல டிவி தொகுப்பாளினி கணவர் கைது!
Sunday September-09 2018

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளி அனிஷாவின் கணவரை சொகுசு கார் மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். 

 

சென்னை நெசப்பாக்கம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் அனிஷா. பிரபல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ள இவர், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். மேலும், தனது கணவர் சக்தி முருகனுடன் சேர்ந்து ஸ்கை எக்யூப்மெண்ட் என்ற நிறுவனத்தையும், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

 

கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ச்சி ஒன்றுக்காக ரூ.37 லட்சம் மதிப்பிலான 103 ஏ.சி-க்களை கே.கே.நகரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரிம் வாங்கிய அனிஷாவும், அவரது கணவரும் அதற்கான பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தனர். பிறகு அவர்கள் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து நேரில் சென்று பணத்தை கேட்ட பிரசாந்துக்கு அனிஷாவும், அவரது கணவர் சக்தியும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதை தொடர்ந்து பிரசாந்த் அளித்த புகாரின் பேரில், அனிஷா மற்றும் அவரது மைத்துனர் ஹரிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். எனினும் முக்கிய குற்றவாளியான சக்தி முருகன் தலைமறைவானார்.

 

இந்நிலையில் இவர்கள் நெசப்பாக்கத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார்களை தங்களது நிறுவனத்துடன் இணைந்து வெளியில் வாடகைக்கு இயக்கினர்.

 

ஓஎல்எக்ஸில் தங்களுடைய கார்களை விற்பதாக கூறியவர்களை தொடர்பு கொண்ட சக்தி முருகனும் அவரது மேலாளர் ரமேஷும் தங்கள் நிறுவனத்தில் கார்களை இணைத்துக் கொண்டு கணிசமான தொகையை வாடகையாக பெறுங்கள் என கூறினர்.

 

இதை நம்பி 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சொகுசு கார்களை இணைத்து அனைத்து அசல் ஆவணங்களையும் நிறுவனத்தில் வழங்கியுள்ளனர். இதையடுத்து காரின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அந்த ஆவணங்களை அடகு வைத்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி விட்டு கடந்த மாதம் அந்த நிறுவனத்தை மூடிவிட்டனர்.

 

இதையடுத்து கார் உரிமையாளர்கள் 25 பேர் தங்களை ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரில் எம்ஜிஆர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மேலாளர் ரமேஷை கைது செய்தனர். கார் மோசடியில் தலைமறைவாக உள்ள சக்தி முருகன் மற்றும் ஹரீஷ் இன்னும் சிலரை போலீஸார் தேடிவந்த நிலையில், கார்களை சக்தி முருகனிடம் பெற்று வெளியே விற்றுகொடுத்த இடைத்தரகர் பாண்டியன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

 

அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்த 16 கார்களை போலீஸார் மீட்டனர். தலைமறைவாக இருந்த சக்திமுருகன் நேற்று சென்னை வந்துள்ளான் என போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சக்திமுருகணை போலீஸார் கைது செய்தனர் அவரிடமிருந்து பி.எம்.டபிள்யூ. கார் ஒன்றும் பறிமுதல் செய்யபட்டுள்ளது.

Related News

3403

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery