ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படம் வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இம்மாதம் 13 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.
டீசர் வெளியீட்டு அறிவிப்பு வெளியானதில் இருந்து 2.0 படத்தின் மீதான் எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது. அதிலும் டீசர் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதோடு, இதுவரை பார்த்திராத 3டி தொழில்நுட்பத்தை 2.0 படத்தின் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3டி திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்தில் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் 2.0 டீசர் திரையிடப்படுகிறது.
3டி- யில் வெளியாகும் அதே நேரத்தில், யூடுபிலும், 2டி திரையரங்குகளில் 2டி தொழில்நுட்பத்திலும் 2.0 பட டீசர் வெளியாகிறது.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...