ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரே பாலினத்தவர், அவர் அவர் மீது கொண்ட ஈர்ப்பால், விருப்பப்பட்டு இணையும் ஓரினச் சேர்க்கை, தண்டனைக்குரிய குற்றம் இல்லை, என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழ் சினிமாவை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் வரவேற்று கொண்டாடினார்கள். நடிகைகள் திரிஷா, கஸ்தூரி, நடிகர்கள் ஆர்யா, சித்தார்த் போன்றவர்கள், ஓரினச் சேர்க்கைக்கான தீர்ப்பை வரவேற்பு, தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்கள்.
இந்த நிலையில், ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்புக்கும், அதற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர், நடிகைகளின் கருத்துக்கும் பிரபல நடிகர் கரிகாலன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கரிகாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான இந்த கடினமான தீர்ப்பை சில திரையுலக சகோதர சகோதரிகள் ஆதரித்துப் பேசி வருவது மனவேதனை தருவதாக இருக்கிறது. வளரும் இளம் தலைமுறைக்கு நாம் முன் உதாரணமாக திகழ வெண்டும் என விழைகின்றேன். பின் தற்போதைய கணக்கீட்டில் இந்த ஒப்புததலுக்கும் ஓரிரு விழுக்காடாய் இருக்கும். இந்த இயற்கைக்கும், இறைபடைப்புக்கும் மாறான சேர்க்கை பத்து விழுக்காடாய், ஏன் நூறு விழுக்காடாய் மாறக்கூடிய பரிதாப சூழல் இருக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒருபால் உறவு தவறு, எச்ஐவி- யும் பிற பாலின நோய்களையும் வரவிக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டதே, ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, எச்ஐவி பயந்துவிடுமா?.
சுதந்திரம்....சுதந்திரம்... சுதந்திரம்... எது சுதந்திரம்?, பயணத்தில் சிகப்பு விளக்கு எரிந்த பின்னரும் பயணிப்பது சுதந்திரமா? நெரிசலோ, விபத்தோ ஏற்படாதா?, இயற்கைக்கு மாறான உறவுப் பயணம் மன நெருக்கடியையோ, மரணத்துக்கு ஏதுவானவற்றையோ நிகழ்த்திவிடாதா?, சிந்திப்போம்...சீர்படுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...