கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாரா, சொந்தமாக தயாரித்து நடித்துள்ள ‘அறம்’ படம் ரிலிஸாக முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால், தான் நடிக்கும் படங்களில் புரோமோஷன்களில் கூட கலந்துக்கொள்ளாத நயந்தாரா, தனது கொள்கையை மாற்றிக் கொண்டு தற்போது ‘அறம்’ படத்தின் புரோமோஷன்களில் கலந்துக் கொண்டாலும் அப்படத்திற்கு விமோச்சனம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே நயந்தராவின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘கோலமாவு கோகிலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு, ஹன்சிகா நடித்து இன்னும் ரிலிஸாகமல் இருக்கும் ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைக்கிறார். ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...