சிம்பு என்றாலே வம்பு, என்ற இமேஜை உடைத்தெரிந்திருக்கும் சிம்பு, மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்த கையோடு ‘மாநாடு’ படத்தில் பிஸியாகியுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர், இரண்டு வருடங்களுக்கு பிஸியாகிவிட்டார்.
இந்த நிலையில், ஏற்கனவே சிம்பு மீது கடுப்பில் இருந்த ‘ஏஏஏ’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், மீண்டும் சிம்புவின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தான் தயாரித்த ‘அடங்காதவன் அசராதவன் அன்பானவன்’ படத்தின் போது சில பிரச்சினைகளை செய்த சிம்பு, தற்போது நடித்து முடித்திருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் பொட்டி பாம்பாக, தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு சமத்து பிள்ளையாக இருந்துள்ளாராம். இதே போல் தான் படம் தயாரிக்கும் போதும் சிம்பு நடந்திருந்தால், தனக்கு நஷ்ட்டம் ஏற்பட்டு இருக்காது, என்று கருதிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவின் இந்த ஓரவஞ்சனையால் மிகவும் அதிர்ப்தியடைந்திருப்பவர், மீண்டும் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து பஞ்சாயத்தை கூட்டுமாறு கோரிக்கையும் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...