Latest News :

'யுடர்ன்’ படத்திற்காக காத்திருக்கும் பூமிகா!
Wednesday September-12 2018

சுமார் 20 வருடங்கள் சினிமாவில் பயணத்திருக்கும் பூமிகா சாவ்லாவுக்கும், அவரது அழகுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை போல அவரது நடிப்புக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளன. தற்போது கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் பூமிகா, தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அந்த வரிசையில் அவர் நடிப்பில் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ள படம் ‘யுடர்ன்’.

 

ஏற்கனவே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘யுடர்ன்’ படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடித்தாலும், ஆதி, பூமிகா என்று முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில், இப்படத்தில் பூமிகா வித்தியாசமான வேடத்தில், வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

அப்படி அவர் எந்த மாதிரியான வேடத்தில் நடித்திருப்பார், என்பதை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் மட்டும் அல்ல, அவரது நடிப்பை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ‘யுடர்ன்’ எப்போது வெளியாகும், என்பதில் பூமிகாவும் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறாராம்.

 

இது குறித்து கூறிய பூமிகா, “ஒரு திரைக்கலைஞர் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை  செய்யும்போது அங்கீகாரம் பெறுவார், அவரும் அதனால் திருப்தி அடைவார்.  'யு டர்னில்' என் கதாபாத்திரம் நான் கடந்த காலங்களில் செய்ததை போல் அல்ல. என் நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.” என்றவர், “சமந்தா ஒரு பிரமாதமான நடிகை, படப்பிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.” என்று சமந்தாவின் நடிப்பையும் பாராட்டினார்.

 

மேலும், யுடர்ன் படம் குறித்து பேசியவர், “தற்போது பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களின் போக்கை பற்றி அவர் கூறும்போது, "நானும் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளேன், மேலும் இந்த வகையிலான திரைப்படங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. திரைக்கதை எழுத்தாளர்கள் இது போன்ற திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களை தொடர்ந்து எழுத வேண்டும்.” என்றார்.

 

சரியான கதை மற்றும் படக்குழு அமைந்தால் மட்டுமே அந்த படம் மக்களை சரியான முறையில் சென்றடையும் என்பதில் உறுதியாக இருக்கும் பூமிகா, தமிழ் சினிமாவில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும், குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டும் ஓகே சொல்கிறார். அப்படி அவர் பல கதைகள் கேட்டு ஓகே சொன்னது தான் ‘யுடர்ன்’.

Related News

3428

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘மா வந்தே’ முதல் பார்வை!
Wednesday September-17 2025

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery