’விஸ்வாசம்’ படம் மூலம் இயக்குநர் சிவாவுடன் அஜித் தொடந்து நான்காவது முறையாக இணைந்திருக்கிறார். அஜித்தின் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யயோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், கமர்ஷியல் மாஸ் எண்டர்டெய்னராக உருவாகிறது. அஜித் மற்றும் இயக்குநர் சிவா இருவரும் எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக ‘விஸ்வாசம்’ படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
அப்ப - மகன் என இரு வேடங்களில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார்.
மதுரை மற்றும் சென்னை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற நிலையில், சில காட்சிகள் சென்னையில் செட் போட்டு படமாக்கப்பட்டது.
திபாவளியன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட காலதாமதத்தால் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் முழு படப்பிடிப்பும் இம்மாதம் இறுதியில் முடிவடைந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இல்லாவிட்டால் அடுத்த மாதம் தொடங்கத்தில் படப்பிடிப்பு முடிவடிந்து விடுமாம். அதன் பிறகு பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட உள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்ததும், அஜித்தின் டப்பிங் பணிகள் தொடங்கி வேகமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காரணம், இப்படத்திற்கு பிறகு அஜித் தனது அடுத்தப் படத்தை உடனே தொடங்க இருக்கிறாராம். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார்.
’பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் ஆக உருவாகும் இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...