சிறு வயதிலேயே சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் கல்யாணி. ‘சாருலதா’, ‘அண்ணாமலை’ ஆகிய சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், ’அளித்தந்த வானம்’, ‘ஸ்ரீ’, ‘ஜெயம்’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதில் ஜெயம் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
பிறகு டிவி ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர், ’மறந்தேன் மெய்மறந்தேன்’, ’பிரதி ஞாயிறு’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், அவர் நடித்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றி பெறாததால் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
இதற்கிடையே, ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர், திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். திருமணத்திற்குப் பிறகு பெங்களூரில் செட்டிலான கல்யாணிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
தனது குழந்தைக்கு நவ்யா கல்யாணி ரோகித் என பெயர் சூட்டியிருக்கும் கல்யாணி, இனி தனது குழந்தை தான் உலம் என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...