சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியின் மூன்றாவது படம் என்பதால் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து சென்னையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று அதிகாலை 5 மணிக்கு சீமராஜா படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, ரசிகர்கள் ஆர்வமாக சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்களை முன் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு திரையிட இருந்த சீமராஜா சிறப்புக் காட்சி சென்னையின் அனைத்து திரையரங்குகளிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால், திரையரங்கிற்கு வந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...