Latest News :

வசூல் சாதனையில் ‘சீமராஜா’! - மகிழ்ச்சியில் ஆர்.டி.ராஜா
Friday September-14 2018

சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி ஆகியோரது நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ‘சீமராஜா’ மக்களிடம் பெரும் வெற்றிப் பெற்றிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்திருக்கிறார்.

 

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மூன்றாவது படமான ‘சீமராஜா’ படம் குறித்து ஊடகங்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தாலும், ரசிகர்களிடம் படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக அறிவித்திருக்கும் தயாரிப்பாளர். ஆர்.டி.ராஜா, வசூல் ரீதியாகவும் படம் சாதனை நிகழ்த்தி வருவதாக கூறியுள்ளார்.

 

இது குறித்து கூறிய ஆர்.டி.ராஜா, “இந்த வெற்றிக்கு காரணமான  சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு தேவையான அத்தனை  அம்சங்களையும் நிறைத்து ஒரு படத்தை தயாரிப்பது என்பது , அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில்  தான். குடும்பமாக படம் பார்க்கும் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம். சிவகார்த்திகேயன் நிறைய  வித்தியாசமான வேடங்களில் நடிக்க  வேண்டும் என்ற நிலையை தாண்டி , அவரது ரசிகர்களுக்கு  பிடித்தமான ஒரு கலகலப்பான படம் தான்  சீமராஜா. 

 

முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல்  சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரை இடபட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

அப்படியனால் இப்போதாவது ஆர்.டி.ராஜா கார் வாங்குவாரா?

Related News

3439

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery