குறைவான படங்கள் இயக்கினாலும், தரமான படம் இயக்கும் இயக்குநர் என்று ‘தரமணி’ மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ள இயக்குநர் ராம், அடுத்து இயக்கும் படம் ‘பேரன்பு’. மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இப்படத்தின் மூலம் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள ராம், முதல் முறையாக பாடலாசிரியர் வைரமுத்துவுடன் கைகோர்த்துள்ளார். ராம் இயக்கிய மூன்று படங்களுக்கும் மறைந்த நா.முத்துக்குமார் தான் பாடல்கள் எழுதியுள்ளார்.
பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராம், நா.முத்துக்குமார் மறைவுக்குப் பிறகு தனது படங்களுக்கு பாடல் எழுத யாரை அனுகுவார், என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது பேரன்பு படத்தில் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், ராம், யுவன் சங்கர் ராஜா, வைரமுத்து என்ற புதிய கூட்டணி உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...