’பூந்தோட்ட காவல்காரன்’, ‘பாட்டுக்கு ஒரு தலைவன்’, ‘மாணிக்கம்’, ‘அரவாண்’, ‘சரோஜா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, வெங்கட் பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ மற்றும் ஷக்தி சிதம்பரம் இயக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.
இவ்விரு படங்களும் பிரம்மாண்டமான முறையில் உருவாவதுடன், மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் ‘பார்ட்டி’ படத்தின் வியாபாரம் தற்போதே சூடு பிடித்திருக்கும் நிலையில், ஏற்கனவே மாபெரும் வெற்றி பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் பிரபு தேவா, பிரபு, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பதால் அப்படமும் வியாபார தொடரபாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், இந்த இரண்டு படங்களை தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறது.
ஒரு படம் வெளியாவதற்கு முன்பாகவே அப்படத்தின் வியாபாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கினாலே அப்படம் நிச்சயம் வெற்றிப் படம் என்பது உறுதி. அதிலும், முன்னணி டிவி நிறுவனம் ஒன்று ரிலிஸுக்கு முன்பாகவே படத்தை வாங்கினால், அப்படம் சூப்பர் ஹிட் என்பது உறுதி.
ஆக, சன் டிவி வாங்கியிருக்கும் ‘பார்ட்டி’ மற்றும் ‘சார்லி சாப்ளின் 2’ இரண்டு படங்களுமே ஹிட் படங்கள் என்பது தற்போது உறுதியாகிவிட்டதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...