ஸ்பைஸி கிளவுட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கே.லோகநாதன் தயாரிக்கும் படம் ‘அர்ஜுனா’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் விஜய் சந்தோஷ் நாயகனாக அறிமுகமாக, நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் நாசர், பாலசரவணன், சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி எடிட்டிங் செய்ய, நிர்மல் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஸ்ரீமணி இயக்கும் இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது.
இதில், இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, கிளாப் அடித்து படத்தை தொடங்கி வைத்து, படக்குழுவினருக்கு வாழ்த்திக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...