Latest News :

விக்ரம் பிரபுவின் அடுத்தப் படம் ‘வால்டர்’
Friday September-14 2018

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக சிங்காரவேலன் தற்போது கிருஷ்ணா நடிக்க சத்யசிவா இயக்கத்தில் ’கழுகு 2’ படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளிவர உள்ள இப்படத்தைத் தொடர்ந்து அதிக பொருட் செலவில் வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாக உள்ள ‘வால்டர்’ என்ற படத்தையும் இந்த நிறுவனம் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கிறார். 

 

இந்த படத்தில் அர்ஜுன் விக்ரம் பிரபு ஜாக்கி ஷெராப் ஆகிய மூவரும் மூன்று விதமான கதாநாயகன் வேடம் ஏற்கிறார்கள். கதாநாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 

சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ புகர் ரதன் இசையமைக்கிறார். கோபிகிருஷ்ணா எடிட்டிங் செய்ய, ஏ.ஆர்.மோகன் கலையை நிர்மாணிக்கிறார். தஸ்தா, ஷெரிப் ஆகியோர் நடனம் அமைக்க, விக்கி சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி யு.அன்பரசன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ள ‘வால்டர்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி, மதுரை, கும்பகோணம், தென்காசி, குற்றாலாம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

Related News

3443

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery