Latest News :

பெண் நடன இயக்குநர் சொர்ணா இயக்கும் ‘நாதிரு தின்னா’
Friday September-14 2018

எஸ். எஸ். ட்ரீம் கலர்ஸ் சார்பில் தனீஷ்பாபு வழங்க ‘நாதிரு தின்னா’ திரைப்படம் உருவாகியுள்ளது.

 

புதுமுகங்கள் ஷப்யாச்சி, ஷ்யாம், மகி, தேஜா, ராதிகாப்ரீத்தி, ஹாரிகா, பவாணி, ஆகியோருடன் தருண் மாஸ்டர், 'வெள்ளரிக்கா' புகழ் ராணி, விஜயலட்சுமி, நாகேஷ்வராவ், இன்னும் பலர் நடித்துள்ளனர்.

 

அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவயது முதல் பருவ வயது வரையிலான காலக்கட்டத்தில் அவர்களுக்குள் நடைபெறும் பாசம், நேசம், அன்பு, அரவணைப்பு, சுகம், துக்கம், இன்பம், துன்பம் காதல், மோதல், உரசல், ஆகிய உணர்வுகளை மையக்கருவாக கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இளைஞர்களுக்காக உருவாகி உள்ள ஜாலியான படம்தான் ‘நாதிரு தின்னா’.

 

கே.வி. மகாதேவன், ஷ்யாம்,வந்தேமாதரம், உபேந்திரகுமார், சக்ரி முதலான இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய முரளீதர்ராகி இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

 

சி.எஸ்.சாய்மணி கலையையும், ஆர். கேசவன் படத்தொகுப்பையும், ஸ்ரீதர் கேமராவையும், ரவிபெல்லூரு இணைதயாரிப்பையும் கவனிக்கின்றனர்.

 

பாரதிராஜாவின் ‘பசும்பொன்’ படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமாகி சத்யராஜ், பிரபு, கார்த்திக், பாலகிருஷ்ணா, ராம்சரண் படங்களில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, போஜ்பூரி, ஒரியா மொழி படங்களில் ஏறக்குறைய 800 படங்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றியவர் சொர்ணா. இவர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி நடனம் அமைத்து, தயாரித்து, தனது முதல் படமாக இயக்கி உள்ளார்.


Related News

3445

’ஃப்ரேம் & ஃபேம்’ தலைப்பில் திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் டூரிங் டாக்கீஸ்!
Wednesday December-17 2025

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...

’சிறை’ படத்தின் இரண்டாவது தனி பாடல் வெளியானது!
Wednesday December-17 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...

‘ரெட்ட தல’ எனக்கு சவாலாக இருந்தது - நடிகர் அருண் விஜய்
Tuesday December-16 2025

பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில்,  ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...

Recent Gallery