தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை கிரங்கடித்தவர் நடிகை சில்க் சுமிதா. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படம் மட்டும் இன்றி, ஏகப்பட்ட படங்களில் நடித்த இவரது நடிப்பில் உருவாகி வெளியாகமல் இருந்த திரைப்படம் ஒன்று தற்போது வெளியாக உள்ளது.
மறைந்த சில்க் சுமிதாவின் கவர்ச்சியான நடிப்பில் உருவாகி வெளிவராமல் இருக்கும் படம் ‘ராக தாளங்கள்’. மாறுபட்ட வேடத்தில் சில்க் சுமிதா நடித்திருக்கும் இப்படம் பல ஆண்டுகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் திருப்பதி ராஜன், இப்படத்தில் சில்க் சுமிதா நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் வியப்பின் உச்சிக்கே செல்வார்கள் என்பது உறுதி, என்று கூறியிருக்கிறார். அபிராமி என்ற கதாபாத்திரத்தில் சில்க் சுமிதா நடித்திருக்கும் இப்படத்தின் முடிவு பார்ப்போரின் மனதை வருத்தி எடுக்குமாம்.
ஸ்ரீ தண்டாயுதபாணி மூவிஸ் சார்பில் தாத்தா கலை மூவிஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ஆர். திருப்பதி ராஜாஜீ இசையை வெளியிட பாண்டிச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் சாலமன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட டிரைலரும், பாடல்களும் அனைவராலும் பாரட்டப்பட்டதோடு, படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு தேதியை அடுத்த வாரத்தில் தயாரிப்பாளர் ஆர்.திருப்பதி ராஜாஜீ அறிவிக்க இருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...