‘நைட் ஷோ’, ‘வனமகன்’, ‘போகன்’, ‘நெருப்புடா’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த வருண், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். நடனம், ஆக்ஷன், நடிப்பு உள்ளிட்ட சினிமாவுக்கு தேவையான அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கும் வருண், எடுத்தவுடனே ஹீரோவாக நடிக்காமல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அதன் முலம் நடிப்பு குறித்த அனுபவத்தை பெற்ற பிறகே ஹீரோவாக அறிமுகமாகிறார்.
'காக்கா முட்டை' மணிகண்டனின் இணை இயக்குநரான நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ படத்தின் மூலம் வருண் ஹீரோவாக அறிமுகமாகிறார். கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பதோடு, நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடிக்கிறது.
இது குறித்து கூறிய வருண், “எனக்கு பிராணிகள் மீதான காதல் அதிகம், அதை வளர்க்கும் ஆர்வம் அதிகம். 'பப்பி' கதையை நான் கேட்டவுடனே தனிப்பட்ட முறையில் என்னை அந்த கதை ஈர்த்தது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள உணர்ச்சி பிணைப்பை அந்த கதை பதிவு செய்வது. ஒரு ஹீரோவாக நான் அறிமுகமாக நிறைய அனுபவங்களை சேகரித்தேன். நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த இந்த படம் அனைத்து தரப்பையும் சென்றடையும். எனக்காக படங்கள் ஓடுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதுவரை வெற்றிகரமான படங்களில் நான் பங்கு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன்.” என்றார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...