Latest News :

சிம்புக்கு அத்தையான குஷ்பு!
Monday September-17 2018

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை முடித்துவிட்ட சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வரும் நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

கடந்த 2013 ஆம் ஆண்டு பவன் கல்யாண் இயக்கத்தில் வெளியாகை மாபெரும் வெற்றிப் பெற்ற தெலுங்குப் படமான ‘அத்தரண்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். இப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் சமந்தா, பிரணிதா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். அதிலும் நதியா ஹீரோவுக்கு அத்தையாக வலுவான வேடத்தில் நடித்திருந்தார்.

 

தற்போது தமிழில் உருவாகும் இப்படத்தில் சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்க, பிரணிதா வேடத்திற்கான நடிகை தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படத்தின் வலுவான அத்தை வேடத்திற்கு குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

மேலும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (செப்.17) ஜார்ஜியாவில் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

3456

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery