கலைத்துறையில் நடிகை சத்யப்ரியாவின் பங்களிப்பை பாராட்டும் விதமாக அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ‘அகடெமி ஆப் யுனிவர்சல் குளோபல் பீஸ்’ (Academy of Universal Global Peace) நடிகை சத்யப்ரியாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
டாக்டர் பட்டம் பெற்றது குறித்து கூறிய நடிகை சத்யப்ரியா, “நான் மருத்துவத்துறை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்பதே என் அம்மாவின் விருப்பம். இப்போது நான் பெரும் மகிழ்ச்சியில் இந்த முனைவர் பட்டத்தை பெற்று கொள்கிறேன்.
இந்த முனைவர் பட்டத்தால் கெளரவிக்கப்பட்ட நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். திரைத்துறையில் இதுவரை நான் என் குடும்பத்திற்க்காக உழைத்தேன். இப்போது என் வாரிசுகள் எல்லோரும் நல்ல நிலையில் உள்ளதால், சமுதாயத்திற்கு என்னால் இயன்றதை செய்ய விழைகிறேன். இந்த கெளரவ பட்டம் என்னை சமுதாயத்தின் மேம்படுத்தலை நோக்கி கொண்டு செல்கிறது.” என்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கும் சத்யப்ரியா, பல சீரியல்களில் நடித்து தமிழக மக்களிடம் பிரபலமடைந்தார்.
சத்யப்ரியாவின் மகன் எம்.எஸ் பட்டம் பெற்று அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்தில் வாழும் கட்டிட கலைஞரான அவரது மகள், இந்திய நிறுவனம் ஒன்றில் ஆன் - லைன் மூலம் பணிப்புரிந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...