தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து போலீஸ் சீருடையில் கருத்து தெரிவித்து பிரபலமானவர் டிவி சீரியல் நடிகை நிலானி. தூத்துக்குடி விவகாரத்தால் கைதான் இவர் அதன் மூலமும் பிரபலமடைந்தார்.
இதற்கிடையே, சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவருக்கும் நடிகை நிலானிக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. திருமணம் செய்து கொள்வதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருமணம் செய்துகொள்ளுமாறு தனது காதலர் தன்னை வற்புறுத்துவதாக கூறி நடிகை நிலானி போலீசில் புகார் அளித்தார். அதில், தான் படப்பிடிப்பில் இருக்கும் போது தனது காதலர் இடையூறு செய்வதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இருவரையும் அழைத்து விசாரித்த போலீசார், இருவரையும் சமரசம் செய்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த லலித்குமார் சென்னை கே.கே.நகரில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து தற்கொலை செய்துக்கொண்டார். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், நடிகை நிலானி காதலன் காந்தி லலித்குமாருடன் ஒன்றாக படுக்கையில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தப்படி இருக்கும் போட்டோக்களும் நிலானி தனது காதலன் காந்தி லலித்குமாரை மடியில் கிடத்தி கொஞ்சும் போட்டோவும் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் நடிகை நிலானி, காந்தி லலித்குமாருடன் நெருங்கி பழகியிருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், அவர் வேறு ஏதோ காரணத்தினால் லலித்குமாரை விலகிச்சென்றதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...