பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ராஜு சுந்தரம் என்று தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பாலிவுட், டோலிவுட் என்று பல உட்களில் நடன இயக்குநர்கள், திரைப்பட இயக்குநர்களாக வெற்றிப் பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர்.
விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களை ஆட வைத்த இவர், இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் தான் ஹீரோ. ‘குப்பத்து ராஜா’ என்ற சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயின்களாக பூனம் பஜ்வா, பல்லக் லால்வானி ஆகியோர் நடித்துள்ளனர்.
எஸ் போக்கஸ் (S Focuss) சரவணன், எம்.சிராஜ், டி.சரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு படூர் ரமேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பார்த்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் எடிட்டிங் செய்கிறார். அன்பறிவு, திலிப் சுப்பராயண் ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர். டி.ஆர்.கே.கிரண் கலையை நிர்மாணித்துள்ளார்.
ரஜினிகாந்தின் வெற்றி பட தலைப்பு என்பதற்காக இந்த தலைப்பு பயன்படுத்தப்படவில்லை, கதைக்கு தேவைப்பட்டதாலே இந்த தலைப்பை வைத்தோம், என்று கூறும் தயாரிப்பாளர்கள் இப்படத்தை வரும் கிறிஸ்துமஸ் பண்கையின் போது வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...