ஹாலிவுட் சினிமா, பாலிவுட் சினிமா, கோலிவுட் சினிமா என்று அனைத்து சினிமாக்களிலும் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் பேச தொடங்கி விட்டார்கள். அதிலும் ஸ்ரீரெட்டி என்ற நடிகை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டதோடு, தான் அவர்களுடன் படுக்கையை பகிர்ந்துக்கொண்டதையும் வெளிப்படையாக கூறிய பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக பல நடிகைகள் நேரடியாக பேச தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரனும், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உண்மையே, என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், ‘கொடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று நடித்து வருபவர், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதே சமயம், இதுவரை தனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது உண்மை தான் என்று பேசும் நடிகைகள், தங்களுக்கு இதுவரை அதுபோல யாரும் தொல்லை கொடுக்கவில்லை என்று கூறுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
செக்ஸ் டார்ச்சரில் சிக்கும் பல நடிகைகள் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர் பெயரை சொல்வதற்கு பயப்படுகிறார்கள் என்றும், அப்படி அவர்கள் இது குறித்து வெளியே பேசினால் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு வராமால் போய்விடும் என்பதாலாயே, தங்களுக்கு யாரும் இதுவரை தொல்லை கொடுக்கவில்லை என்று கூறிவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...