இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்து மாதம் தொடக்கத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க, ரோபோ சங்கர், தம்பி ராமையா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
தற்போது, ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்ட செட்டில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதில் அஜித் வெள்ளை வேஷ்டி, சட்டையில் இருக்கிறார். வில்லனுடன் அவர் மோதும் இந்த சண்டைக்காட்சி தான் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியாக இருக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,


அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...