விஜயின் ‘சர்கார்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் படம் தீபாவளியன்று வெளியாக இருக்கிறது.
இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, எழுத்தாளர் பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பாடல்கள் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ’சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்’ என்ற தலைப்பில் நாளை (செப்.19) காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தயாரிப்பு தரப்பு அறிவித்தது.
தற்போது அந்த அறிவிப்பு என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்தநாள் என்பதால், செப்டம்பர் 24 ஆம் தேதி ‘சர்கார்’ படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிடப் போகிறார்களாம்.
அக்டோபர் 2 ஆம் தேதி வரை சர்கார் பாடல்களை கேட்க காத்திருக்க வேண்டுமே! என்று கவலைப்பட்ட ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் படத்தின் ஒரு பாடலை படக்குழு அன்று வெளியிடுகிறார்களாம். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தான் நாளை 11 மணிக்கு படக்குழு வெளியிடுவதாக இருந்ததாம்.
தற்போது அது பற்றிய தகவல் லீக்கானதால் தயாரிப்பு தரப்பு சற்று அதிர்ச்சியடைந்தாலும், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...