திரைப்படங்களைக் காட்டிலும் தொலைக்காட்சி தொடர்கள் மக்களிடம் எளிதில் சென்றடைவதால், நாளுக்கு நாள் தொலைக்காட்சி தொடர்களில் பல புதிய யுக்திகள் கையாளப்பட்டுள்ளது. திரைப்படங்களுக்கு இணையாக காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என்று பல அம்சங்களைக் கொண்டு உருவாகும் சீரியல்களில் திரைப்பட நடிகர்களும் நடிக்க தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில், நடிகை ராதிகா 7 வேடங்களில் நடிக்கும் சீரியல் ஒன்று பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. சீரியல் உலகில் முன்னணியில் இருக்கும் ராதிகா, தற்போது ‘வாணி ராணி’ என்ற சீரியலை தயாரித்து நடித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் முடியும் தருவாயில் உள்ள நிலையில், தனது ராடான் நிறுவனம் மூலம் புதிய சீரியல் ஒன்றை ராதிகா தயாரித்து நடிக்க உள்ளார்.
’சந்திரகுமாரி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த சீரியல் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சரித்திரமும், சமூகமும் என மாறி மாறி பயணிக்கும் இந்த சீரியலில் ராதிகா 7 வேடங்களில் நடிக்க, திரைப்பட நடிகை பானு அவரது மகள் வேடத்தில் நடிக்கிறார்.
சரித்திர பாகங்களை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, சமூக பாகங்களை சி.ஜே.பாஸ்கர் இயக்குகிறார். சிற்பி இசையமைக்கும் இந்த சீரியலுக்கு பாலமுருகன் மற்றும் பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கின்றனர்.
சென்னை மற்றும் மும்பையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த சீரியல் வரும் அக்டோபர் மாதம் முதல் சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாக உள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...