’என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ ஆகிய படங்களை இயக்கிய ராஜாபண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் படத்திற்கு ‘கள்ளபார்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விக்ரம், தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தின் மூலம் அரவிந்த்சாமியும், ரெஜினா கஸண்ட்ராவும் முதல் முறையாக ஜோடி சேர, இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் நடிக்கிறார். பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் வசனத்தை ராதாகிருஷ்ணன் எழுதுகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, மாயபாண்டி கலையை நிர்மாணிக்கிறார். இளையராஜா எடிட்டிங்கை கவனிக்க, மிராக்கில் மைக்கேல் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். வி.ராமச்சந்திரன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.
ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்களுக்கு சென்னையில் நடைபெற உள்ளது.
இன்று நடைபெற்ற துவக்க விழாவில் எம்.எல்.ஏ பா.ரங்கநாதன், தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், நடிகர் பொன்வண்ணன், நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டி பத்மினி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...