Latest News :

பிர்லா போஸுக்காக 45 வயது தோற்றத்திற்கு மாறிய விக்ரம் பிரபு!
Wednesday September-19 2018

‘60 வயது மாநிறம்’ படத்தின் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டிய விக்ரம் பிரபு, தான் நடிக்கும் அடுத்தப் படத்தில் தனது அதிரடியான மற்றொரு பரிணாமத்தை வெளிக்காட்டப் போகிறார். 

 

போலீஸ் வேடம் என்பது அனைத்து ஹீரோக்களுக்கும் ஸ்பெஷாலான ஒன்று. அந்த வகையில் விக்ரம் பிரபு ‘துப்பாக்கி முனை’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். அதுவும் சாதாரண போலீஸ் அல்ல, என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் போலீஸாக நடித்திருக்கிறாராம்.

 

கதை தேர்வில் மிகவும் கவனம் செலுத்தி வரும் விக்ரம் பிரபு, ’துப்பாக்கி முனை’ படத்தின் கதையும், கதைக்களமும் வித்தியாசமாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்திருந்தார். அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை சமீபத்தில் வெளியான டிரைலர் நிரூபித்தது.

 

இதில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க, வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், 'மிர்ச்சி' ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

Thuppakki Munai

 

ராசாமதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார்.

 

இந்தியாவில் மிகச்சிறந்த கதையாசிரியர்களில் ஒருவரான ‘அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்திடம் இணை இயக்குநராக பணியாற்றியவருமான தினேஷ் செல்வராஜ் இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

 

படம் குறித்து இயக்குநர் தினேஷ் செல்வராஜ் கூறுகையில், “சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது, அனால் நான் வாளாக பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது, இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது, தேசதந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர சமுயாதயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை.” என்பது என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் தினியாய கருத்து. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன? பெற்றது என்ன? என்பதே இந்த ‘துப்பாக்கி முனை’ யின் கதை சுருக்கம். மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸ் கதாபாத்திரத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம் பிரபு சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் கதையும், விக்ர ம்பிரபுவின் வித்யாசமான தோற்றமும் படத்தின் பெரும் பலம்.” என்றார்.

 

மும்பை, டெல்லி, மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் முழு படத்தையும் முடித்துள்ளனர். மேலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்காத ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் எடுக்கப்பட்டிருக்கிறதாம். நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு விஷேச ட்ரீட்டாக அமையும் என்று ஒளிப்பதிவாளர் ராசாமதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

தற்போது பின்னணி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘கபாலி’, ‘விஐபி 2’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘துப்பாக்கி முனை’ படத்தின் இசைக்கோர்ப்பு பணி கிரீஸ் நாட்டில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

3473

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery