தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் என்றழைக்கப்படும் சினிமா பி. ஆர். ஓ க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசிபழனிவேல், பொருளாளா் யுவராஜ், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், ராமானுஜம், இணைச்செயலாளர்கள் குமரேசன், ஆனந்த், செயற்குழு உறுப்பினர்கள் மதுரை செல்வம், கிளாமர் சத்யா, ஆறுமுகம், சரவணன், கே. செல்வகுமார், கௌரவதலைவர்கள் நெல்லை சுந்தர்ராஜன், திரைநீதிசெல்வம், மற்றும் மௌனம் ரவி, ரியாஸ், துரைபாண்டியன், வெட்டுவானம்சிவகுமார், மதிஒளிகுமார், வெங்கட், பாரிவள்ளல், கணேஷ்குமார், பாலன், அந்தணன், ஆதம்பாக்கம் ராமதாஸ், சக்திவேல்,மனோகரன், கடையம்ராஜூ, மேஜர்தாசன், செல்வரகு, ராஜ்குமார், சூர்யா, விஜிமுருகன், நித்திஷ், சக்திசரவணன், புவன், சையதுஇப்ராகிம், பிரகாஷ், சுரேஷ்குமார்,புதிய உறுப்பினர்கள் பிரியா, தர்மதுரை, தியாகராஜன் ஆகியோருக்கு தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் அடையாள அட்டை வழங்க, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் சால்வை அணிவித்து உறுப்பினர்களை பாராட்டி பேசினார்கள்.
இந்த விழாவில் முன்னாள் மக்கள் தொடர்பாளரும், நடிகரும் இயக்குநரும் திரைப்பட தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு கௌரவ உறுப்பினர் அடையாள அட்டை யூனியன் சார்பில் வழங்கப்பட்டது.
தலைவர் விஜயமுரளி வரவேற்புரை ஆற்றி தொகுத்து வழங்க, செயலாளர் பெருதுளசிபழனிவேல் நன்றி தெரிவித்து பேசினார்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...