Latest News :

லாரன்ஸ் மாஸ், பிரபு தேவா கிளாஸ்! - இசையமைப்பாளர் அம்ரீஷ்
Wednesday September-19 2018

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் பிரபு தேவா, பிரபு, நிக்கி கல்ராணி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கும்படியான இசையமைப்பாளரான அம்ரீஷ், ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்.

 

‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெற்ற ”சின்ன மச்சான்...” பாடல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியின் பேவரைட் பாடலான இப்பாடலுக்கு, இசையமைப்பாளர் அம்ரீஷ், தனது இசையின் மூலம் வேறு ஒரு வடிவத்தை கொடுத்திருந்தாலும், அப்பாடலின் ஒரிஜினாலிட்டி மாறாமலும் இப்பாடலை உருவாக்கிய விதமே, பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவ காரணமாக அமைந்திருக்கிறது.

 

சுமார் 53 லட்சம் பார்வையாளர்களை கடந்து, அனைத்து தளங்களிலும் முதலிடத்தில் உள்ள இப்பாடலுக்கு கிடைத்த வெற்றியால் ‘சார்லி சாப்ளின் 2’ குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

 

இது பற்றிய சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ளும் விதமாக இசையமைப்பாளர் அம்ரீஷ், இயக்குநர் ஷக்தி சிதம்பரம், தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது, “இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப் பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தப் பாடலை ’சார்லி சாப்ளின் 2’ படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப்படுத்திக் கொண்டோம்.” என்றார்.

 

இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசுகையில், ”அம்ரீஷ் நல்ல இசை ஞானம் உள்ளவர். இன்று இந்த ஒரு பாடலே பட்டையை கிளப்பி இருக்கு எனும் போது அடுத்து வருகிற பாடல்கள் எல்லாம் இன்னும் பட்டையை கிளப்பும் என்றார்.

 

”சின்ன மச்சான்..” படத்தில் திணிக்கப்படவில்லை. கதைக்கு பொருத்தமாக இருந்ததால் தான் அந்த பாடலை பயன்படுத்தினோம். படம் பார்த்தால் உங்களுக்கே தெரியும். இந்த ஐடியாவை கொடுத்ததோடு, இந்த பாடல் சிறப்பாக வருவதற்கு தயாரிப்பாளர் சிவா பெரும் ஒத்துழைப்பு கொடுத்தார்.” என்றார்.

 

Charli Chapline 2 Press Meet

 

இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசுகையில், “இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா சார், இயக்குநர் ஷக்தி சிதம்பரம் சார் பிரபுதேவா சார் ஆகியோருக்கும், இந்த பாடலை ட்விட் மூலம் மேலும் பாப்புலராக்கிய தனுஷ் சாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

 

பிரபு தேவா சார் எவ்வளவோ டியூனுக்கு வித விதமான டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். சின்ன மச்சான் பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.

 

எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மூலம் ’மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலமாகவும், பிரபுதேவா சாரின் ’சார்லி சாப்ளின் 2’ மூலமும் எனக்கு கிடைத்திருக்கிறது எனும் போது பெருமையாக இருக்கிறது.

 

மிகப் பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து ’சார்லி சாப்ளின் 2’ படத்தில் இன்னும் 4 பாடல்கள் இருக்கு, அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்பறேன். 

 

சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் எல்லா சோசியல் மீடியாவிலும் முதல் இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் இருக்கு என்பது எங்கள் குழுவினருக்கு கிடைத்த வெற்றி.

 

லாரன்ஸ் மாஸ்டர், பிரபு தேவா மாஸ்டர் இருவருக்கும் நான் பணிபுரிந்திருப்பதால், இருவருக்கும் இடையிலான வித்தியாசத்தை கேட்கிறார்கள். ராகவா லாரன்ஸ் மாஸ்டர் மாஸாக இருக்க வேண்டும், என்று எதிர்ப்பார்ப்பார், பிரபு தேவா மாஸ்டர் கிளாஸாக இருக்க வேண்டும், என்று எதிர்ப்பார்ப்பார்.” என்றார்.

Related News

3477

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

Recent Gallery