சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் மக்களிடம் பிரபலமாக இருப்பதோடு, அவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வரிசையில், தமிழ் சீரியல் உலகில் சின்னத்திரை நயந்தாராவாக வலம் வருபவர் வாணி போஜன்.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘தெய்வமகள்’ சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வாணி போஜன், செல்லும் இடம் எல்லாம் அவரை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துக் கொள்கிறது. மேலும், திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு ஏராளமாக அவரை அனைத்தையும் நிராகரித்தவர், பொருமையாக இருந்து தனது ‘தெய்வமகள்’ சீரியலை முடித்துக் கொடுத்த கையோடு, திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தற்போது தனது முழு கவனத்தையும் சினிமா மீது செலுத்தி வரும் வாணி போஜன், அவ்வபோது பல போட்டோ ஷூட்களை நடத்தி அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், பிரபலமானலே எதிர்கொள்ளும் பிராபலங்களை தற்போது வாணி போஜனும் எதிர்க்கொண்டு வருகிறார். அதாவது, வாணி போஜன் பெயரில் பல ட்விட்டர் பக்கங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் போலியான பக்கங்கங்கள் என்றாலும், அவற்றின் மூலம் வெளியிடப்படும் தகவலால் வாணி போஜனுக்கு சிக்கல்கள் ஏற்படுகிறதாம். இதனால் ரொம்பவே அப்செட்டாகியிருக்கும் அவர், தற்போது போலியான பக்கங்கங்களில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், தனது ஒரிஜினல் ட்விட்டர் பக்கத்தையும் அவர் தெரியப்படுத்தியுள்ளார். இது தான் அது,
.@vanibhojanoffl is my only official account, kindly avoid any tweets or updates in my name from any other accounts. Thank you 😇 pic.twitter.com/2yv7hfm8S2
&mdash ; Vani Bhojan (@vanibhojanoffl) September 19, 2018
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...