தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார், ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என்று பல கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதோடு, டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரது மனைவி நடிகை மஞ்சுளா சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்துவிட்டார். இவருக்கு ப்ரித்தா, ஸ்ரீதேவி, வனிதா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.
இந்த மூன்று மகள்களும் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், தற்போது திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகிவிட்டார்கள். இவர்களில் வனிதா என்பவர் மட்டும் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், வனிதா மீது நடிகர் விஜய குமார் சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில், மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை வனிதாவுக்கு வாடகைக்கு விட்டதாகவும், ஆனால் தற்போது அவரது வீடு என்று கூறி வீட்டை காலி செய்யாமல் இருப்பதாக, தெரிவித்திருக்கிறார்.
வனிதாவுக்கும் விஜயகுமாருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு விவகாரம் போலீஸ் வரை சென்று பிறகு சமாதானம் அடைந்த நிலையில், தற்போது இவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...