பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் தாயார் லட்சுமியம்மா இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்த மோகன் பாபு, 80 களில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். பல தமிழ்ப் படங்கலில் வில்லனாக நடித்திருக்கும் இவர், சில படங்களை இயக்கி தயாரித்தும் இருக்கிறார்.
இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பால் திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மோகன் பாபுவின் தாயார் லட்சுமியம்மா இன்று காலை 5.30 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவரது உடல் திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு அருகேயுள்ள வித்யா நிகேதன் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சினிமா துறையினர், தொழிலதிபர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...